follow the truth

follow the truth

April, 19, 2025
Homeவணிகம்உலக சுற்றுச்சூழல் தினத்தை உலக வர்த்தக மையத்தில் World Vision Lankaவுடன் இணைந்து கொண்டாடிய Coca-Cola...

உலக சுற்றுச்சூழல் தினத்தை உலக வர்த்தக மையத்தில் World Vision Lankaவுடன் இணைந்து கொண்டாடிய Coca-Cola அறக்கட்டளை

Published on

உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5, 2024 அன்று Coca-Cola அறக்கட்டளை மற்றும் World Vision Lanka நிறுவனம் ஆகியவை, கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் மூன்று புதிய Drop-in பிளாஸ்டிக் சேகரிப்பு வசதிகளை நிறுவின.

ASPIRE திட்டத்தின் கீழ், இந்த நிகழ்வில் உலக வர்த்தக மையத்தின் முன்னால் திறப்பு விழாவும், PET பிளாஸ்டிக் போத்தல்களை தனியாக பிரித்தெடுத்து மீள்சுழற்சி செய்வதின் அவசியம் குறித்து சேகரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அறிவை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட தகவல் விழிப்புணர்வு அமர்வுகளும் இடம்பெற்றன.

மேலும், வீட்டில் இருந்து PET பிளாஸ்டிக் போத்தல்களை கொண்டு வருமாறு அனைவரையும் ஊக்குவித்தன.

இந்த ஒத்துழைப்பு, உலக வர்த்தக மையத்தில் சேகரிக்கப்படும் அனைத்து PET கழிவுகளும் முறையாக தனியே பிரிக்கப்பட்டு மீள்சுழற்சி செய்யப்படுவதை உறுதி செய்கிறது.

உலக வர்த்தக மையத்தில் மூலோபாய முறையில் அமைக்கப்பட்டுள்ள 30 சேகரிப்பு நிலையங்கள் மூலம் PET சேகரிப்பை அதிகரிப்பதே ASPIRE திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த முயற்சி சமூகங்களை ஊக்குவிப்பதோடு, நிலையான கழிவு நிர்வகிப்பதையும் மேம்படுத்தி, திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்குகளை அடைய உதவுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி...

மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சிறிய அளவில் உயர்வைப் பதிவு செய்துள்ளது. WTI வகை மசகு...

சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்வு

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பல வரிகளை நீக்கியதையடுத்து சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. இதன்படி ஜப்பானின்...