அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை கொலை செய்ய ஈரானின் சதித்திட்டம் குறித்து அமெரிக்காவிற்கு உளவுத்துறை தகவல் கிடைத்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது சுமத்தப்பட்டிருக்கும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை இக்குற்றத்தை ஈரான் மறுத்துள்ளதுடன் ஈரானுக்கு களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளது.
மேலும் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய மேத்யூ குரூக்சுக்கும் வெளிநாடு அல்லது உள்நாட்டில் உள்ள சதிகாரர்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது