வெளியில் இருந்து வரும் சவால்கள் விளையாட்டிற்கு இடையூறாக இல்லாமல் தன்னால் முடிந்ததைச் செய்வதாக நம்புவதாக இலங்கையின் முன்னாள் இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (15) தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“எவருக்கும் அவர்களின் வாழ்க்கையில் கடினமான நேரம் என ஒன்று வரும். நான் அவர்களை நாளுக்கு நாள் மெதுவாக எதிர்கொள்கிறேன். நான் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும். என்ன செய்யப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரியும்.
ஒரு வீரராக, வெளியில் இருந்து வரும் சவால்கள் எனது ஆட்டத்திற்கு இடையூறாக இல்லாமல், விளையாட்டிற்கு என்னால் என்ன செய்ய முடியும் என்று நான் எப்போதும் யோசிப்பேன்.
இதில் எனக்கு நம்பிக்கை அதிகம். இந்தப் போட்டிக்கு மட்டுமல்ல. அடுத்த தேசிய அணி போட்டிகளில் விளையாட இது பெரும் நம்பிக்கையாக உள்ளது.
இறுதிப் போட்டியிலும் இந்த மாதிரியான ஆட்டத்தின் மூலம் தன்னம்பிக்கையை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில், கடந்த ஆண்டு அதிக ஓட்டங்கள் குவித்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியின் நாயகனாக இருந்தேன்…”