தரக்குறைவான ப்ரெட்னிசோலோன் (Prednisolone) மருந்தை வழங்கி கண்பார்வை இழந்த நோயாளிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த குறித்த திரவ மருந்தால் கண்களை இழந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் இல்லாததால், நோயாளிகள் அதிக பணம் கொடுத்து அவற்றைப் பெற வேண்டியுள்ளது என கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவிக்கிறார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த தரக்குறைவான மருந்தை வழங்கிய கண்பார்வை இழந்த நோயாளிகளை கவனிப்பது சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.