ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் தினமும் ஒரு கப் காபி குடிப்பதன் மூலம் உயிருக்கு ஆபத்தை குறைக்கலாம் என்று சீன மருத்துவப் கல்லூரி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்திருப்பது நீண்ட கால தொற்றாத நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது மற்றும் காபி குடிப்பது உடலில் உள்ள உயிர்வேதியியல் எதிர்வினைகள் தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் காட்டுகின்றனர்.
10,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களிடம் 13 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.