பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அத்துல்லா தரார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “முன்னாள் ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் பல்வேறு தேச விரோத செயல்களில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அக்கட்சி தடை செய்யப்படுவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசவிரோத செயல்களில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சப் கட்சி ஈடுபட்டதற்கு போதிய ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாகவும், அதை வைத்தே அக்கட்சியின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அத்துல்லா தரார் தெரிவித்துள்ளார்.