ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் இம்மாத இறுதியில் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொறிமுறையானது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை 4 முதல் 6 வாரங்களுக்குள் வெற்றிபெறச் செய்யும் அளவுக்கு பலமாக இருப்பதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிக்க தாமதமானது ஏன்? என்பது பற்றி ஊடகம் ஒன்று நடத்திய விசாரணையில்
பீதியில் ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்கப் போவதில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கு இணங்கக்கூடிய மற்றும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய வேட்பாளர் ஒருவர் இம்மாத இறுதியில் நியமிக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொறிமுறையானது தனது வேட்பாளரை வெற்றிபெறச் செய்யும் அளவுக்கு பலமாக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளராக வரும் வேட்பாளரை உருவாக்குவதற்கு அடிமட்ட மட்டத்தில் ஒழுங்கமைக்கும் செயற்பாடுகளை தாம் ஏற்கனவே வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.