follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉள்நாடு'ஜயகமு ஸ்ரீலங்கா' கிளிநொச்சியில்

‘ஜயகமு ஸ்ரீலங்கா’ கிளிநொச்சியில்

Published on

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நாடளாவிய மக்கள் நடமாடும் சேவையின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்வு இன்றும் (12) நாளையும் (13) கிளிநொச்சி இந்துக் கல்லூரி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் இன்றைய (12 ) நாளில் , புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கௌரவவிக்கும் “ஹரசர திட்டம்” நடைபெற உள்ளது.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் , பாடசாலை உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் விநியோகம் செய்யப்படும் , பிரதேச செயலாளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள் வழங்கி வைக்கப்படும் .

நாளையா (13 ) நிகழ்வில் , சுயதொழில் ஆரம்பிப்பதற்கான நிதியுதவி, சக்கர நாற்காலி, மூக்கு கண்ணாடி வழங்குதல், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அதிகத்தடவை பதிவு செய்து வேலைக்காக வெளிநாடு சென்ற புலம்பெயர் தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு சதொச வவுச்சர்கள் வழங்கல் போன்றவை நடைபெறஉள்ளது

வேலை தேடும் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்கும் “ஸ்மார்ட் யூத் கிளப்” நிகழ்வும் இங்கு நடைபெற உள்ளது . இத்திட்டத்தின் ஊடாக தொழில் பயிற்சிக்கான நிதியை ஜனாதிபதி நிதியம் வழங்கின்றமை குறித்தும் தெளிவூட்டப்படும் .

முறைசாரா தொழிலாளர்களின் தொழில் கௌரவத்தையும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் “கரு சரு” திட்டமும் , ஆட் கடத்தல் மற்றும் தொழிலாளர் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு இந்நடமாடும் சேவையினால் மேலும் பின்வரும் விடயங்கள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்பட்ட உள்ளன.

குறிப்பாக இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தில் அங்கீகரிக்கப்பட்ட 40 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் சேவையை இலவசமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒரு மூடை சீமெந்தின் விலை 100 ரூபாவால் குறைக்க தீர்மானம்

சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி...

துறைமுக சிற்றுண்டிச்சாலை சோற்றுப் பொதியில் கரப்பான் பூச்சி – அதற்கு முன் கத்தியின் ஒரு பகுதி..

இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு துறைமுகத்தின் சமையல் அறையில் உள்ள மீன் கறியில் கரப்பான்...

கடலில் மிதந்து வந்த மர்மமான வீடு கண்டுபிடிப்பு

கிழக்கு யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் பகுதியில் கடலில் மிதக்கும் படகு ஒன்றில் கட்டப்பட்ட வீடு ஒன்றை மீனவர்கள் குழு ஒன்று...