தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஆவண நடவடிக்கைகள் மற்றும் உள்ளக செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக டிஜிட்டல் செயற்பாட்டு வலையமைப்பு ஒன்றினை அறிமுகப்படுத்துதல் மற்றும் தேசிய ரீதியில் அந்நடவடிக்கையை மிக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, JICA நிறுவனம் மற்றும் Cyclomax International (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
EDMS (Electronic Document Management System) என அழைக்கப்படும் இந்த டிஜிட்டல் செயற்பாட்டு வலையமைப்பின் ஊடாக தலைமை அலுவலகத்துடன் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 800 பிரிவுகளுக்கு மேற்பட்ட செயற்பாட்டு நிலையங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், இதுவரை அச்சு ஊடகத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட உள்ளக நடவடிக்கைகள் யாவும் டிஜிட்டல் முறையில் கடதாசி பயன்பாடின்றி நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.