பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் மற்றும் உற்பத்தித்திறன் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு இன்று கூடிய 09 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இம்மாதம் முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத் தொகையை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட நிறுவனங்கள் அமைச்சரிடம் இணக்கம் தெரிவித்துள்ளன.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு இடையில் நேற்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளன .
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்து அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மே 1ஆம் திகதி வெளியிடப்பட்டது.
ஆனால் பெருந்தோட்டக் கம்பனிகள் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தது , அது தொடர்பில் முறையான ஒரு இணக்கப்பட்டை எடுக்குமாறு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அதற்கமைய இன்று இரு தரப்பினருக்கும் இடையில் எட்டப்பட இணக்கப்பாடு இந்நாட்டிலுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இன்றைய இணக்கப்பாட்டின் போது பல பெருந்தோட்டக் கம்பெனிகள் இந்த மாதத்திலிருந்து நாளாந்த சம்பளத்தையும், அவர்களின் வருமானத்தின் அடிப்படையில் உத்தேச கொடுப்பனவையும் வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.