எகிப்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் உளவுத்துறைத் தலைவர்களின் பங்கேற்புடன் காஸா போர் நிறுத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் தோஹாவில் தொடங்கும் என்று எகிப்து தெரிவித்துள்ளது.
உளவுத்துறைத் தலைவர் அப்பாஸ் கமெல் தலைமையிலான எகிப்திய பாதுகாப்புக் குழு, ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைத்து, முன்கூட்டியே போர்நிறுத்த உடன்படிக்கையை எட்டுவதற்கான பணியில் ஈடுபடும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
போர் நிறுத்தத்துக்கான பல விஷயங்களில் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மீண்டும் கெய்ரோ வந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இஸ்ரேலிய உளவுத்துறை தலைவர் டேவிட் பார்னியா மற்றும் அமெரிக்க மத்திய புலனாய்வு முகமை இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள், ஆனால் இதுகுறித்து இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.