தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளது.
சிறந்த ஊதியம் மற்றும் சலுகைகளை கோரியே இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சங்கம் மூன்று நாள் பொது வேலைநிறுத்தத்தை நடத்தியது.
ஆனால் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன நிர்வாகம் தங்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வராததால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் உறுப்பினர்கள் சுமார் 30,000 பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர், மேலும் அதன் நடவடிக்கைகள் சாம்சங் உற்பத்தியை சீர்குலைக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
எவ்வாறாயினும், வேலைநிறுத்தம் காரணமாக உற்பத்தி வரிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தும் அதே வேளையில் தொழிற்சங்கத்துடன் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உறுதிபூண்டுள்ளதாக Samsung Electronics தெரிவித்துள்ளது.