follow the truth

follow the truth

March, 20, 2025
HomeTOP1குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் - பாகிஸ்தான் பிரதமர் உறுதி

குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் – பாகிஸ்தான் பிரதமர் உறுதி

Published on

பாகிஸ்தானில் கைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த இலங்கைத் தொழிலாளரான பிரியந்த குமார என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்படுவதற்குக் காரணமான அனைத்துக் குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிலைநாட்டுவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பாகிஸ்தான் பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நம்பிக்கை என்பன ஒருபோதும் பாதிப்படைய இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செயலுடன் தொடர்புடைய அனைத்து வீடியோக் காட்சிகள் மற்றும் தகவல்கள், தற்போது பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினரால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 113 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாகப் பாகிஸ்தானில் தொழில்புரிந்த இலங்கையரான பிரியந்த குமார, ஒரு முகாமையாளராக உயர் தொழில் திறமையைக் காட்டியவர் என்றும் ஜனாதிபதியிடம் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளுக்கு கடவுளின் மன்னிப்பு இல்லை என்றும் சட்டத்திலும் அவர்களுக்கு மன்னிப்பு கிடைக்காதென்றும் தெரிவித்த பிரதமர், நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதுடன், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும், இலங்கை அரசாங்கமும் மக்களும் வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த ஆண்டில் சுகாதார அமைச்சு புதிய கட்டிடத்திற்கு மாற்றம்

கொழும்பில் உள்ள காசல் தெருவில் அமைந்துள்ள மகளிர் மருத்துவமனைக்கு அருகில் நிர்மாணிக்கபட்டுவரும் சுகாதார அமைச்சின் 16 மாடி அலுவலக...

ஜனாதிபதிக்கும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல்

இந்த வருட வரவு செலவுத் திட்டம் தரவுகளின் அடிப்படையில் அறிவியல் ரீதியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் செயல்படுத்தப்படும் வரவு செலவுத்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும்...