follow the truth

follow the truth

April, 9, 2025
HomeTOP2உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியாக ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் வைத்திசாலை அழிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியாக ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் வைத்திசாலை அழிப்பு

Published on

உக்ரைன் தலைநகர் கீவில் (Kyiv) பல இடங்களை குறிவைத்து ரஷ்ய இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், ஒரு தாக்குதலில் குழந்தைகள் வைத்தியசாலை ஒன்றும் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய தாக்குதலில் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை ரஷ்ய ஏவுகணையால் தாக்கப்பட்ட ஓக்மடிட் குழந்தைகள் வைத்தியசாலை விடுதியில் சுமார் 20 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் உக்ரைனிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

கீவில் உள்ள குழந்தைகள் வைத்தியசாலையின் வைத்தியர் லெசியா லிசிட்சியா, ஏவுகணை தாக்கிய தருணத்தைப் பற்றி தெரிவிக்கையில்,

இது “ஒரு படத்தில் இருப்பது போல்” “பெரிய ஒளி, பின்னர் ஒரு பயங்கரமான ஒலி” என்று விவரித்தார். “வைத்தியசாலையின் ஒரு பகுதி அழிக்கப்பட்டது, மற்றொன்றில் தீ ஏற்பட்டது. அது உண்மையில் மிகவும் சேதமடைந்துள்ளது – ஒருவேளை வைத்தியசாலையின் 60-70%,” பகுதி அழிக்கப்பட்டது என்று அவர் கூறுகிறார்.

புற்றுநோய் சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உட்பட பல செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு பெரிய வைத்தியசாலை ஓக்மடிட் என்று லிசிட்சியா தெரிவித்தார்.

மற்ற இடங்களில், மத்திய உக்ரைனிய நகரமான Kryvyi Rih இல் நடந்த தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். அங்குள்ள இராணுவ நிர்வாகத்தின் தலைவரின் கருத்துப்படி, கிழக்கு நகரமான Pokrovsk இல் மேலும் மூன்று பேர் மற்றும் Dnipro இல் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்குமூலம் வழங்கியதன் பின் CIDயிலிருந்து வௌியேறினார் கெஹெலிய

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகள்,...

நாடு முழுவதும் 14,000 பொது பாதுகாப்பு குழுக்கள்

நாடு முழுவதும் பொது பாதுகாப்பு குழுக்களை நியமிப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது பதில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி...

டொமினிகன் குடியரசில் இரவு நேர களியாட்ட விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் பலி

டொமினிக்கன் குடியரசில் சாந்தோ டொமிங்கோவில் உள்ள பிரபலமான இரவு நேர களியாட்ட விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 79...