இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் கறுவா ஏற்றுமதி மூலம் 15 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 60 மெட்ரிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு 251 மெட்ரிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.