ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து இருநூற்றி ஏழு அலுவலகங்கள் பத்து நாட்களுக்குள் திறக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றியடையச் செய்வதற்கும் ஏனைய கட்சிகளுடன் ஒன்றிணைந்து இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
கட்சி சார்பற்ற வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இன்னும் 100 நாட்கள் அவகாசம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி கணக்கிட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.
அண்மையில் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதனைத் தெரிவித்த அவர், அலுவலகக் கட்டுமானப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாகவும், அடுத்த மாதம் முழுவதும் தினமும் தேர்தல் பேரணிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.