சமகால அடிமைத்துவ வடிவங்களைக் கையாள்வதற்கென இலங்கை வலுவான சட்ட ரீதியான சட்டகம் ஒன்றை கொண்டிருப்பதுடன் தொழில் புரிவதற்கான
குறைந்தபட்ச வயதெல்லையை 14 வருடங்களிலிருந்து 16 வருடங்களாக அதிகரித்தமை மற்றும் சிறுவர் ஊழியம் இல்லாத வலயங்களை ஸ்தாபித்தமை போன்ற ஏனைய துறைகளில் முன்னேற்றத்தைச் சாதித்துக் கொண்டுள்ளது. எவ்வாறிருப்பினும் ஒரு சில சந்தர்ப்பங்களில் பலவந்தமான ஊழியம் மற்றும் அடிமைச் சேவகம் என்பவற்றுக்கு இணையானவையாக இருந்து வரும் சாதி அடிப்படையிலான பாரபட்சம் மற்றும் ஊழியச் சுரண்டல் போன்ற பாரிய பிரச்சினைகளை வெற்றி கொள்ள வேணடுமானால் இலங்கை பெருமளவுக்கு அனைவரையும் உள்வாங்கும் மற்றும் அனைத்துத் துறைகளையும் அரவணைத்துக் கொள்ளும் ஒரு சமூகமாக உருவாக வேணடுமென ஐ நா நிபுணர் இன்று தெரிவித்தார்.
சமகால அடிமைத்துவ வடிவங்கள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் டெமோயா ஓபோகாட்டா பால்நிலை, வயது, இனத்துவம், சாதி, வர்க்கம் மற்றும் ஏனைய காரணிகள் என்பவற்றின் அடிப்படையில் ஊழியச் சுரண்டல் மற்றும் பாரபட்சம் என்பவற்றுக்கு இடையில் நிலவிவரும் இணைப்புக்கள் குறித்து தாம் கவலையடைந்திருப்பதாக கூறினார்.
‘பலவந்தமான ஊழியம், சிறுவர் உழைப்பு மற்றும் ஏனைய சுரண்டல் நடைமுறைகள் என்பவற்றின் மூலமாக தொடர்ந்து நிலவி வரும் பாரபட்சயல்பிலான
மனப்பாங்குகள் மற்றும் நடைமுறைகள் என்பவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தருணம் வந்துள்ளது என இலங்கையில் மேற்கொண்ட எட்டு நாள்
விஜயத்தின் முடிவின் போது இன்று கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் ஒபோகோட்டா தெரிவித்தார்.
தனது இலங்கை விஜயத்தின் போது ஒபோகாட்டா அரசாங்க அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஐ நா ஆகிய தரப்புக்களையும், அதேபோல மனித உரிமைகள் பாதுகாவலர்கள், கல்விமான்கள், குடிபெயர் தொழிலாளர்கள் மற்றும்
ஊழியச் சுரண்டல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரையும் ஓபோகாட்டா சந்தித்தார்.
மேலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்திருக்கும்
இரு ஆடைத் தொழிற்சாலைகளுக்கு அவர் விஜயம் செய்ததுடன் கண்டிக்கும் அப்பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கும் அவர் பயணங்களை
மேற்கொண்டார்.
‘ஓரம் கட்டப்படுதல், பாரபட்சம், சுரண்டல் இயல்பிலான வேலை நிலைமைகள் மற்றும் மிக மோசமான வாழ்க்கை நிலைமைகள் என்பவற்றினால்
மலையகத் தமிழர்கள் ஏற்றத் தாழ்வான விதத்தில் பாதிக்கப்பட்டிருப்பதை நான் நேரடியாகப் பார்த்தேன்’ என்றும் ஐ நா நிபுணர் ஒபோகோட்டா இதன்போது குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பான விசேட அறிக்கையாளரின் அறிக்கை 2022 செப்டம்பர் மாதத்தில் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்து