follow the truth

follow the truth

October, 22, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஎந்த தேர்தலையும் ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை

எந்த தேர்தலையும் ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை

Published on

ஜனாதிபதி தேர்தலையோ அல்லது வேறு எந்த தேர்தலையோ ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை சந்திக்க முதுகெலும்பில்லாத எதிர்க்கட்சிகள் தேர்தலை ஒத்திவைப்பது பற்றி பேசினாலும் அரசாங்கம் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் இன்று (4) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், எதிர்காலத்தில் நாடும் மக்களும் எதிர்பார்க்கும் பொருளாதார, அரசியல், சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை தற்போதைய ஜனாதிபதியால் மட்டுமே மேற்கொள்ள முடியும். எனவே, அவரை மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக நியமிப்பதன் மூலம், அடுத்த ஐந்து வருடங்களுக்குள், உலகின் பலமான பொருளாதாரம் கொண்ட நாடாக இலங்கையை உருவாக்க முடியும்.

ஜனாதிபதி சிக்கலில் இருந்து நாட்டைப் பொறுப்பேற்கும் போது ஒரு பக்கம் கடுமையான பொருளாதார நெருக்கடி, மறு பக்கம் பாரிய மக்கள் எதிர்ப்புமாக இருந்தது.

இரண்டு வருடங்கள் கழித்து இன்று நாடு எங்கே இருக்கிறது என்று பார்க்கும் போது அன்று நாம் எடுத்த முடிவு 100 சதவீதம் சரியானது என்று மகிழ்ச்சி அடைகிறோம்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். அது நிரந்தரமானது. நாட்டுக்கு ஒரு சவால் வந்தபோது அதனை எதிர்கொள்ளும் பலமான முதுகெலும்பு ஜனாதிபதிக்கு மட்டுமே இருந்தது. ஐ.ம.சக்தியும் திசைகாட்டியும் விசித்திரக் கதைகளைச் சொல்கின்றன. அதற்கு மக்கள் ஏமாற மாட்டார்கள். மக்கள் விடுதலை முன்னணி, திசைகாட்டி என்ற பெயரில் மாறுவேடத்தில் வந்துள்ளது. ஆனால் அவர்களின் இரத்த வரலாற்றை யாராலும் அழிக்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவரும் அனுரகுமார அவர்களும் மரண வீடுகளில் தனிமையைப் போக்குவதற்குத்தான் பொருத்தமானவர்கள். அதனால் அந்த இருவரையும் அந்த வேலைக்கு வைத்துக் கொள்வோம். நாட்டைக் கட்டியெழுப்பிய ரணிலிடம் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலையை ஒப்படையுங்கள்.

மொட்டுக் கட்சி ஒரு ஜனரஞ்சகக் கட்சி. நாட்டை ஒருங்கிணைத்த ஜனரஞ்சகத் தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்கள் எமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை சரியான நேரத்தில் நாட்டுக்கு தெரிவிப்பார். எங்களிடம் ஒரு வெற்றி வேட்பாளர் இருக்கிறார். நாங்கள் வெற்றிப் பக்கம் இருக்கிறோம். அதனால் தான், சந்திகளிலும், வீதியோரங்களிலும் “நான்தான் மொட்டின் வேட்பாளர்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதைக் கணக்கெடுக்காதீர்கள்.

தன்னால் தனக்கான காரியங்களைச் செய்ய முடியும் என்பதை நாட்டுக்கு உழைத்து நிரூபித்த ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. அதனால்தான் இப்போது ரணில்தான் ஆள் என்று கிராம மக்கள் சொல்கிறார்கள் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“எரிபொருள் விற்பனையில் எனது பொக்கட்டுக்குள் சென்ற பணம் தற்போது அநுர திஸாநாயக்கவின் பொக்கட்டுக்கு செல்கிறது”

தான் எரிசக்தி அமைச்சராக இருந்த போது எரிபொருள் விற்பனை மூலம் தனது சட்டைப் பைக்குள் பணம் செல்வதாக அன்று...

“திசைகாட்டி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடவில்லை”

இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிடும் மக்களுக்கு...

இந்த வருட பொதுத் தேர்தலுக்காக பொதுஜன பெரமுனவின் டார்கட் இளைஞர் குழு

பொதுத் தேர்தல் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு வியூகக் குழுவொன்றை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...