follow the truth

follow the truth

March, 11, 2025
HomeTOP2"I will rape your mother.." வலுக்கும் ஆர்ப்பாட்டம்

“I will rape your mother..” வலுக்கும் ஆர்ப்பாட்டம்

Published on

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரின் விளைவுகள் விபரீதமானதாக மாறி வருகிறது. இஸ்ரேலிலும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போரை சரிவர கையாளவில்லை என்று மக்கள் கொதிப்பில் உள்ளதாக தெரிகிறது.

அவ்வப்போது அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கொந்தளிப்பான சூழ்நிலையை கட்டுப்படுத்த கடுமையான நடவைடிகைகளை பெஞ்சமின் நெதன்யாகு மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் அல் – குத்ஸில் திரண்ட சுமார் 1,30,000 போராட்டக்காரர்கள் இஸ்ரேலில் புதிதாக தேர்தல் நடத்த வலியுறுத்தியும், காசாவில் பிணைகக் கைதிகளாக மீதமுள்ள 100 இஸ்ரேலியர்களை விரைவில் மீட்க கோரியும் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தை ஒடுக்க இஸ்ரேல் பொலிசார் கடுமையான முறைகளை பிரயோகித்தது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் பாரிஸ் சதுக்கத்தில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இல்லத்தின் அருகே திரண்ட போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிசார் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டத்தொடங்கினர்.

அப்போது பொலிஸ் ஒருவர் போராட்டக்காரிடம் மிகவும் கீழ்த்தரமான வகையில், ‘ நான் உன் தாயை பலாத்காரம் செய்வேன்’ என்று மிரட்டியுள்ளார். போராட்டக்காரர்கள் சிலரை பொலிஸ் கும்பல் ஆக்ரோஷமாக கையாளும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று போராட்டம் நடந்த இடங்களிலெல்லாம் பொலிசாரின் கடுமையான அணுகுமுறையை இஸ்ரேல் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விவசாய SMS சேவை – மார்ச் 31க்கு முன் பதிவு செய்யுமாறு அறிவித்தல்

விவசாயத் திணைக்களத்தின் 1920 விவசாய ஆலோசனை சேவையினால் செயல்படுத்தப்படும் விவசாய SMS சேவை மூலம் பயிர்கள் தொடர்பான இலவச...

சிறுமியை தொழிலுக்கு ஜோர்தானுக்கு அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறை

போலி பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளைத் தயாரித்து, சிறுமியொருவரை ஜோர்தானில் உள்ள ஒரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக அனுப்பிய...

தொழிற்சங்க நடவடிக்கை – ஜெர்மனியில் விமான நிலையங்களுக்கு பூட்டு

விமான நிலைய ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமை காரணமாக ஜெர்மனி முழுவதும் நூற்றுக்கணக்கான விமான...