ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை வெளியேற்றுவதற்கு தடை விதித்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (02) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அதே கட்சியின் பிரதிச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரை பிரதிவாதிகளாக்கி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தாக்கல் செய்த வழக்கை பரிசீலித்த கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி அனுர விக்கிரமசிங்க இந்த தடையை பிறப்பித்துள்ளார்.
வழக்கு விசாரணை செய்யப்பட்டு இறுதித் தீர்மானம் வழங்கப்படும் வரை இந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் இந்த உத்தரவின்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக செயற்படுவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.