follow the truth

follow the truth

December, 23, 2024
Homeவணிகம்‘Ignite the Future’ எனும் தொனிப்பொருளின் கீழ் SUN விருது வழங்கும் நிகழ்வில் ஊழியர்களை கௌரவித்த...

‘Ignite the Future’ எனும் தொனிப்பொருளின் கீழ் SUN விருது வழங்கும் நிகழ்வில் ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

Published on

2023/24 நிதியாண்டில் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், சிறந்த செயல் திறன்களையும் திறமைகளையும் வெளிப்படுத்திய ஊழியர்களை கௌரவிக்கும் முகமாக வருடாந்த விருது வழங்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

‘எதிர்காலத்தை ஒளிரச் செய்யுங்கள்’ (Ignite the Future) என்ற தொனிப்பொருளின் கீழ், சுகாதார சேவைகள், வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் விவசாய வணிகம் போன்ற அதன் வணிகத் துறைகளின் ஊழியர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் நிகழ்வ ஏற்பாடு செய்யப்பட்டது.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், துணைத் தலைவர் விஷ் கோவிந்தசாமி, சன்ஷைன் குழுமத்தின் நிறைவேற்று அதிகாரமுடைய முக்கிய குழு உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்ட இந்த விருது வழங்கும் நிகழ்வில், 156 பேருக்குத் Merit, Excellence மற்றும் Chairman விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், 10 முதல் 20 ஆண்டுகள் வரை நிறுவனத்தின் வெற்றிக்காக உழைத்த ஊழியர்களின் விசுவாசத்தைப் பாராட்டி 89 நீண்டகால சேவை விருதுகளும் வழங்கப்பட்டன. மேலும், பணியிட சிறப்பு பங்களிப்புகளுக்கான 13 விருதுகளும் இங்கு வழங்கப்பட்டன. 3000க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸின் வெற்றியில் சிறந்த பங்களிப்பை ஆற்றிய ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம் இதன்போது கருத்து தெரிவிக்கையில்,

“எமது நிறுவனத்தின் வெற்றிக்கு உங்களின் பங்களிப்பிற்காக முதலில் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இன்றைய விருதுகளைப் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்கும் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன். நமது ஒவ்வொரு வணிகத் துறையிலும் தங்களின் பொறுப்புகளை நன்கு உணர்ந்தவர்கள், நிறுவனத்தின் செயல்திறனுக்காக அந்தப் பொறுப்புகளை சீராக நிறைவேற்ற உழைத்துள்ளனர். கடந்த வருடம் மிகவும் சவாலான காலகட்டத்தை எதிர்கொண்ட நாம் எதிர்காலத்தில் இவ்வாறான சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சவால்களுக்கு மத்தியிலும் புத்தாக்கங்களை அறிமுகப்படுத்தி அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமம் முன்னேறி வருவதை மகிழ்ச்சியுடன் நினைவுகூர வேண்டும். நமது வெற்றியின் பலமே நமது மனித வளம்தான். அவர்களின் பலத்தால் கடந்த நிதியாண்டில் பெரும் வெற்றியைப் பெற முடிந்தது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.” என தெரிவித்தார்.

சன்ஷைன் ஹோல்டிங்ஸின் SUN விருது வழங்கும் நிகழ்வு அதன் ஊழியர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொணர ஒரு சிறந்த வாய்ப்பாகவும் அமைந்தது. அங்கு, சன்ஷைன் ஊழியர்கள் தங்கள் பாடல் மற்றும் நடனத் திறன் மூலம் விருது மேடையை சுவாரஸ்யமாக்கினர், மேலும் மேடையில் தங்கள் கலைத் திறன்களிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

31 மார்ச் 2024 இல் முடிவடைந்த ஆண்டில் சன்ஷைன் ஒருங்கிணைக்கப்பட்ட குழு வருவாய் 55.5 பில்லியன் ரூபாயைப் பதிவு செய்ய முடிந்தது, இது முந்தைய ஆண்டை விட 7% வளர்ச்சியைக் குறிக்கிறது. மதிப்பாய்வின் போது வரிக்குப் பிந்தைய இலாபம் 66.4% வளர்ச்சியுடன் 6 பில்லியன் ரூபாயாக அமைந்திருந்தது.

சன்ஷைன் ஹோல்டிங்ஸின் ஹெல்த்கேர் மற்றும் நுகர்வோர் பிரிவுகளின் பங்களிப்பும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27.6% வளர்ச்சியுடன் 3.7 கோடி ரூபாய் வலுவான மொத்த இலாபத்தைப் பேணுவதில் முக்கியப் பங்காற்றியது. இந்த காலகட்டத்திற்கான மொத்த இலாப வரம்பு 31% ஆக இருந்தது, இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 500 அடிப்படை புள்ளிகளின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது. நிறுவனத்தின் வருவாயில் சன்ஷைன் ஹெல்த்கேர் பிரிவு மிகப்பெரிய பங்களிப்பாளராக இருந்தது, மொத்த வருவாயில் 50% ஆகும். நுகர்வோர் பொருட்கள் துறை 34.8% மற்றும் விவசாய வணிகத் துறை 15% பங்களித்துள்ளமை குறிப்பபிடத்தக்கது.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் தொடர்பாக
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. என்பது இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளான சுகாதாரம், நுகர்வுப் பொருட்கள் மற்றும் விவசாய வணிகத்தில் பெறுமதியை உருவாக்குவதன் மூலம் ‘தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு’ பங்களிக்கும் பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமாகும்.

1967 இல் ஸ்தாபிக்கப்பட்ட குழுவானது, தற்போது இலங்கையின் முன்னணி வர்த்தக நாமங்களான Zesta Tea, Watawala Tea, Ran Kahata, Daintee Confectionary மற்றும் Healthguard Pharmacy போன்றவற்றின் தாயகமாக உள்ளது, 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் 55 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. மேலும் அந்த துறைகள் 2023 இல் “வேலை செய்வதற்கான சிறந்த இடம்” என்று சான்றளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் இருப்பின் நோக்கம் “நல்ல விஷயங்களை வாழ்க்கைக்கு கொண்டு வருவது” என்று நாங்கள் நம்புகிறோம், அதாவது, அனைத்து இலங்கையர்களுக்கும் தரமான மருந்துகள் மற்றும் நுகர்வோர் பொருட்களை மலிவு விலையில் கிடைக்கச் செய்வோம், இதன் மூலம் அனைவருக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வோம். எங்கள் வணிகத்தை நெறிமுறையோடு நடத்துவதற்கான எங்கள் உறுதிப்பாடு மற்றும் எங்கள் மதிப்புகளுக்கு உண்மையாக இருப்பதன் மூலமே எங்கள் வளர்ச்சி வரையறுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Fashion Bug தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக LMD வாடிக்கையாளர் ஆய்வில் முதலிடத்தில்

இலங்கையின் விருப்பத்திற்குரிய பேஷன் வர்த்தகநாமமான Fashion Bug, LMD சஞ்சிகையின் 2024 வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டாவது...

ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் அதிகரிப்பு

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, 2024 ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,097.1 மில்லியன் அமெரிக்க...

HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்” மற்றுமொரு நிதியறிவு பயிற்சிப்பட்டறை நட்டம்புவை மற்றும் நுவரெலியாவில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, நுரெலியா மற்றும் நிட்டம்புவை நகரங்களை மையமாகக் கொண்டு...