follow the truth

follow the truth

July, 7, 2024
HomeTOP2காஸா - அல்-ஷிஃபா மருத்துவமனையின் தலைவர் விடுவிப்பு

காஸா – அல்-ஷிஃபா மருத்துவமனையின் தலைவர் விடுவிப்பு

Published on

காஸாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் தலைவர் ஏழு மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் சிறைகளில் உள்ள பலஸ்தீன கைதிகளின் தற்போதைய நிலை முன்னெப்போதையும் விட மோசமாக இருப்பதாக தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரது கட்டுப்பாட்டில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை ஹமாஸ் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமாக செயல்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

ஆனால் இதை ஹமாஸ் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

இதேவேளை, அவரது விடுதலைக்கு இஸ்ரேலிய அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

200 பாடசாலைகளுக்கு 2,000 டெப் கணனிகள்

புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும்,...

தயாசிறி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் நுழைவதற்கு...

மாரிடேனியா படகு விபத்தில் 89 பேர் பலி

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாரிடேனியா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 89 பேர்...