follow the truth

follow the truth

July, 6, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாபொய் சொல்லி மக்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்

பொய் சொல்லி மக்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்

Published on

நாடு வங்குரோத்தடைந்துள்ள நேரத்தில், வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கான செயல்பாட்டில், நாட்டில் கட்டமைப்பு ரீதியாக எதிர்நோக்கி வரும் அனைத்து சிக்கல்களையும் சவால்களையும் கண்டறிந்து தீர்வு காண வேண்டும். இந்தப் பயணம் வெற்றியடைய வேண்டுமானால் நாட்டு மக்களுக்கு பொய்களைக் கூறி ஏமாற்றக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று நம் நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன் சுமார் 100 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக செலுத்த வேண்டியுள்ளோம். எனவே, இந்த மரணப் பொறியில் இருந்து வெளிவரக்கூடிய வழிமுறைகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டிம். நாட்டை ஆள்பவர்கள் அனைவரும் எமது நாட்டின் தற்காலிக பொறுப்பாளர்களே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாட்டுக்காக உடன்படிக்கைகளை மேற்கொள்ளும்போது தன்னைப் பற்றியோ, தனது இருப்பைப் பற்றியோ, தனது அரசியல் பயணத்தைப் பற்றியோ சிந்திக்காமல், நாட்டைப் பற்றியே சிந்தித்து செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆட்சியாளர் தன்னைப் பற்றி சிந்திக்காமல், நாட்டின் 220 இலட்சம் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். நாட்டு மக்களை ஏமாற்றி மக்களை குறைமதிப்புக்குட்படுத்தும் காலம் முடிவுக்கு வர வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், களுத்தறை, பேருவளை ஸேம் ரிபாய் ஹாஜியார் மகா வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 01 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வங்குரோத்து என்பது கடனை செலுத்த முடியாத நிலையாகும். அதிலிருந்து விடுபட, கடனை செலுத்தும் நிலைக்கு வர வேண்டும். இதற்கு, வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் போது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் மறுசீரமைப்பு செயல்முறை முன்னெடுக்கப்பட வேண்டும். தேவையின்றிச் செய்யப் போனால், பிழைப்புக்கேற்பச் செய்யப் போனால், ஏனோ தானோ என்று செய்யப் போனால் நாட்டுக்கு நன்மை பயக்காத உடன்பாடே எட்டும்.

எனவே, நாட்டு மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது. பொய்யான விடயங்களை முன்வைத்து நாட்டு மக்களை அரசியல் ரீதியாக ஏமாற்றமடையச் செய்ய வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

வங்குரோத்து அடைந்த பிறகு எந்த நாட்டிலிருந்தும் கடன் பெறவில்லை

இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டு எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள்...

பியுமியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் கண்டுபிடிப்பு

விமானம் மூலம் போதைப்பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் வீட்டில் பிரபல மாடல் அழகி...

“வேட்பாளரை வைப்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசிப்போம்”

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சிகளால் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது...