இலங்கையின் இரண்டாவது இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் மொனராகலை கும்புக்கன பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.
இதற்கென 11 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மொனராகலை மாவட்டத்தில் 16000 ஹெக்டேயரில் இறப்பர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை 50,000 ஆக அதிகரிக்க இலங்கை இறப்பர் அபிவிருத்தி திணைக்களம் திட்டமிட்டுள்ளது. தற்போது சிறியளவிலான 1000 விவசாயிகள் மொனராகலை இறப்பர் செய்கையில் ஈடுபட்டுள்ளதடன் அதனையும் இரு மடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.