follow the truth

follow the truth

July, 5, 2024
Homeஉள்நாடுமீனவ சமூகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

மீனவ சமூகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

Published on

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இதேவேளை, தென்மேற்கு பருவமழை தீவிரமான காலநிலை காரணமாக அரபிக் கடற்பகுதியில் கடும் காற்று வீசக்கூடும் எனவும், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

07 மற்றும் 20 வடக்கு அட்சரேகை மற்றும் 55 மற்றும் 68 கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 70-80 கிலோமீற்றர் வரையில் வீசக்கூடும் எனவும், இப்பிரதேசங்களில் தற்போது மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் கரைக்கு செல்லுமாறும் அல்லது உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

செய்முறை பரீட்சைகள் ஜூலை 09 ஆரம்பம்

2023ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்...

பாராளுமன்றம் ஜூலை 09 முதல் கூடவுள்ளது

பாராளுமன்றம் ஜூலை 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர...

ஐ.ம.சக்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவிற்கு இடையீட்டு மனுதாரராக ஐக்கிய மக்கள் சக்தி...