follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1வருத்தமாக இருக்கிறது, வலிக்கிறது.. - தென் ஆப்பிரிக்கா அணித் தலைவர்

வருத்தமாக இருக்கிறது, வலிக்கிறது.. – தென் ஆப்பிரிக்கா அணித் தலைவர்

Published on

2024 டி20 உலகக் கிண்ணம் தொடரில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று அசத்தியது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டி கடைசி ஓவரின், கடைசி பந்துவரை திரில் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியது.

ஐ.சி.சி. நடத்திய உலகக் கிண்ண தொடர்களில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி தென் ஆப்பிரிக்கா அணி அசத்தியது. இறுதிப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா வெற்றி வாய்ப்பை இந்தியாவிடம் பறிக் கொடுத்தது.

உலகக் கிண்ணம் தோல்வியை தொடர்ந்து போட்டிக்கு பிறகு பேசிய தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் ஏய்டன் மார்க்ரம் கூறும் போது, “மிகவும் வருத்தமாகத் தான் இருக்கிறது. இதில் இருந்து மீண்டுவர சில காலம் ஆகும். வலிக்கிறது. ஆனால் பந்துவீச்சாளர்கள் மற்றும் மொத்த அணியினருக்கும் முழு பாராட்டை கொடுக்க வேண்டும்.”

“நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். அவர்களை எங்களால் அடிக்க முடிந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தினோம். நாங்கள் சிறப்பாக பேட் செய்தோம். எனினும், கிரிக்கெட் எனும் தலைசிறந்த போட்டியின் சூழல் இன்று எங்களுக்கானதாக அமையவில்லை.”

“நாங்கள் ஏராளமான போட்டிகளை கடந்து வந்திருக்கிறோம். கடைசி பந்தை வீசி முடிக்கும் வரை அது முடியாமல் தான் இருந்தது. போட்டியின் போது நாங்கள் சவுகரியமான நிலைக்கு வரவேயில்லை. எங்கள் மீது ஸ்கோர் போர்டு அழுத்தம் இருந்தது. அந்த வகையில், இந்த இறுதிப் போட்டிக்கு தகுதியான அணி நாங்கள் என்பதை உணர முடியும்.”

“இந்த முடிவு நல்ல முறையில் அமையும் என்று நம்புகிறேன். கடுமையான போட்டி அளித்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம், எங்களது திறமையை நல்ல முறையில் வெளிக்கொண்டு வருவோம் என்று நம்புகிறேன்..” என்று தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும்...

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...