பொலிவிய ஜனாதிபதி மாளிகையை அந்நாட்டு இராணுவ வீரர்கள் நேற்றைய தினம் சுற்றி வளைத்துள்ளனர்.
தலைநகர் லா பாஸில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் படையினர் புகுந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கிளர்ச்சியாளர் இராணுவத் தலைவர் ஜெனரல் ஜுவான் ஜோஸ் ஜூனிகா (Juan Jose Zuniga) இதற்கு தலைமை தாங்கியதாகக் கூறப்படுகிறது, முக்கிய அரசாங்க கட்டிடங்கள் அமைந்துள்ள முரில்லோ சதுக்கத்தில் கவச வாகனங்கள் மற்றும் துருப்புக்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
ஜனநாயகத்தை மறுசீரமைக்க விரும்புவதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸை (Luis Arce)அவர் மதிக்கும் அதே வேளையில், ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
ஆனால் சில மணி நேரங்களுக்குள், உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் இராணுவத்தின் நடவடிக்கைகளை சட்டவிரோதமானது என்றும் Juan Jose Zuniga உள்ளிட்ட வீரர்களை வெளியேறுமாறும் எதிர்ப்புகள் கிளர்ந்தன.
ஜனாதிபதி ஆர்ஸ்,பொலிவியாவின் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று பாராட்டி, அதன் பின்னர் நாட்டின் குடிமக்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி
“பொலிவிய மக்களுக்கு மிக்க நன்றி” என்றும் “வாழ்க ஜனநாயகம்” எனவும் தெரிவித்திருந்தார்.
அவர்களில் சிலர் சதி முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தெருக்களில் இறங்கினர்.
ஆனால் சதிப்புரட்சிக்கு முயற்சித்த தலைவரை பொலிவிய பொலிஸார் கைது செய்ததாக மேலும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.