follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1தனியார் துறையில் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து இந்தியாவுடன் கலந்துரையாடல்

தனியார் துறையில் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து இந்தியாவுடன் கலந்துரையாடல்

Published on

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதார – தொழிநுட்பத் துறைகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் முதலீடுகளை ஊக்குவித்து கடல்சார் செயற்பாடுகளை இலகுபடுத்தும் நிதி வலயமாக கொழும்பு துறைமுக நகரத்தை கட்டமைப்பதே எமது நோக்கமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்குள் தொழில் நிறுவனங்களின் அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடுகளை உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான ‘DigiEcon’ உலக முதலீட்டு மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ‘DigiEcon’ உலக முதலீட்டு மாநாடு ‘இலங்கையின் இதுவரை பயன்படுத்தப்படாத திறனைப் பயன்படுத்துதல்’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று(25) ஆரம்பமானது.

ஆரம்ப அமர்வின் பின்னர், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், இந்த மாநாட்டுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் IFS இன் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் மொபட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“நாம் விரைவான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டுமானால், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் முழு புத்தாக்க கட்டமைப்பு அவசியம். அதை சுற்றுலா மற்றும்ல் மூலம் ஆரம்பிக்க முடியும். இத்துறை மற்றொரு வேகமாக வளர்ந்து வரும் துறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு மேம்படுத்துவது? எங்கிருந்து அதற்கான பயணத்தை ஆரம்பிப்பது என்ற கேள்விகள் உள்ளன.

அதற்காக முதலில், நமது பொருளாதாரத்தில் இந்தத் துறையை எவ்வாறு விரிவுபடுத்துவது என்பதைக் கண்டறிய வேண்டும். டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் புத்தாக்கம் என்பன நமக்கு எவ்வாறு பயனளிக்கும் என்று ஆராய வேண்டும்.

நாம் தற்போது அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய துறைகளை அடையாளம் கண்டுள்ளோம். விவசாய நவீனமயமாக்கல் டிஜிட்டல் துறையின் விரிவாக்கத்துடன் கைகோர்த்து செல்லும். இரண்டாவதாக, பொருளாதார நெருக்கடி மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு. அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி பயன்படுத்தக்கூடிய பணியாளர்கள் தேவை குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

டிஜிட்டல் பொருளாதார கேள்வி அதிகரித்துள்ளது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் எதிர்கால தேவைகளைப் பார்க்க வேண்டியது அவசியம். வன்பொருள் மற்றும் மென்பொருள் துறைகளை உள்ளடக்கிய சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு ஜாம்பவான்களுக்கு இடையே நாம் இருக்கிறோம். அந்த அறிவைப் பயன்படுத்தி மேற்படி நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

தனியார் துறையில் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து ஏற்கனவே இந்தியாவுடன் கலந்துரையாடலை தொடங்கியுள்ளோம். இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (SLASSCOM) மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை முகாமைத்துவ நிறுவனங்களின் அரச சார்பற்ற இந்திய வர்த்தக சங்கம் (NASSCOM) ஆகியவை இதற்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளன. மேலும் பல நிறுவனங்களும் இணைந்துகொள்ளும் என நம்புகிறோம்.

இந்த வர்த்தகத்தை உருவாக்கும் அதேநேரம் நமக்கான தேசிய களத்தை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை பெறவும் நாம் முயற்சிக்கிறோம். சீனாவுடனான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளோம். அதன் முடிவுகள் வெற்றிகரமாக அமையுமென நம்புகிறோம். நாம் ஆசியாவிலிருந்தே பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். அதன்போது பலதரப்பட்ட துறைகள் குறித்து கனவம் செலுத்த வேண்டியதும் அவசியமாகும்.

டிஜிட்டல் பரிமாற்ற முகவர் நிலையமொன்றை அமைக்க இருக்கிறோம். முன்பு, கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்திய நாங்கள், இப்போது பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறோம். நாங்கள் அறிமுகப்படுத்தும் இறுதி புதிய நிறுவனம் செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய மையமாகும்.

நமது பல்கலைக்கழகங்களில் இருக்கும் வசதிகளை மேம்படுத்தி விரிவுபடுத்தி வருகிறோம். பல்கலைக்கழகங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) கற்பித்தலை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் உயர் தொழில்நுட்ப நகரங்களுக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்காக குறைந்தபட்சம் 100 ஏக்கர் அல்லது அதற்கும் அதிகமான பரப்பளவு கொண்ட கொழும்பின் புறநகர் பகுதியில் காணியொன்றை பெறுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். யாழ்ப்பாணம் போன்ற சிறிய பகுதிகளில் 25 முதல் 50 ஏக்கர் வரையிலான நகரங்களை நிறுவ முடியும். ஒரு பாரிய அதிதொழில்நுட்ப நகரம் கொழும்பிலும் மற்றொன்று கண்டியிலும் நிறுவ எதிர்பார்க்கிறோம்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஸ்க் – மோடி இடையே தொலைபேசி கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத் தலைவர் ஈலோன் மஸ்க் இடையே தொலைபேசி...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால்,...