follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஎரிவாயு வெடிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

எரிவாயு வெடிப்பு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

Published on

எரிவாயு வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க பொதுமக்களுக்கு 2 விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எரிவாயு சிலிண்டர்களில் ஏற்படும் தீ விபத்து குறித்து விசாணைகளை மேற்கொண்டு தீர்வு அறிக்கையை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எரிவாயு தொடர்பில் விபத்துக்கள் ஏற்பட்டாலோ அல்லது ஏற்படும் சாத்தியம் காணப்பட்டாலோ அருகில் உள்ள சமையல் எரிவாயு முகவர், பொலிஸ் நிலையம் அல்லது இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் விசேட குழுவுக்கு அறிவிக்க முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 0115 811 927 மற்றும் 0115 811 929 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன...