follow the truth

follow the truth

January, 5, 2025
HomeTOP28,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான அறுதி உறுதிப் பத்திரம்

8,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான அறுதி உறுதிப் பத்திரம்

Published on

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அறுதி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தவிர தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை 1,070 உறுதிப் பத்திரங்களை வழங்க திட்டமிட்டுள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 50,000 கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி இந்த உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட 22 குடியிருப்பு வீடுகளில் 14,559 வீடுகள் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக, மிஹிந்து சென்புர, சிறிசர உயன, மெத்சர உயன, லக்முத்து செவன, சிறிமுத்து உயன ஆகிய திட்டங்களை மையப்படுத்தி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக லக்ஸந்த செவன, ரந்திய உயன, லக்முத்து உயன, முவதொர உயன, சியசத செவன, புரதொர செவன, ஜயமக செவன, மிஹிஜய செவன, ஹெலமுத்து செவன, சியபத செவன, லக்சேத செவன, லக்கிரு செவன ஆகிய வீட்டுத் திட்டங்களுக்கு முன் உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட இந்த ஆண்டு இறுதியில் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த வருட இறுதிக்குள் அனைத்து கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கும் உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மனுஷவிடம் CID வாக்குமூலம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டம் : நாளை அமைச்சரவைக்கு

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாளை (6) நடைபெறவுள்ள அமைச்சரவைக்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் போக்குவரத்து மட்டு

கொழும்பு அவிசாவளை வீதியின் போக்குவரத்து இன்றும் நாளையும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல் விடுத்துள்ளனர். ஹங்வெல்ல பொலிஸ்...