follow the truth

follow the truth

April, 17, 2025
HomeTOP1இலங்கையர்கள் தொடர்பில் கலந்துரையாட இன்று ரஷ்யாவிற்கு தூதுக்குழு

இலங்கையர்கள் தொடர்பில் கலந்துரையாட இன்று ரஷ்யாவிற்கு தூதுக்குழு

Published on

ரஷ்யா – உக்ரேன் போரில் போரிடுவதற்கு ரஷ்யாவின் கூலிப்படையில் கடமையாற்றும் பாதுகாப்புப் படையினரை இந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைக்காக இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (24) ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்குச் செல்லவுள்ளது.

இந்த தூதுக்குழுவில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் காமினி வலேபொட ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

மேலும் இந்த குழுவில் தயாசிறி ஜயசேகர. ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் சமன் வீரசிங்க உள்ளிட்டோரும் உள்ளடங்குகின்றனர்.

எதிர்வரும் 26ஆம் திகதி மொஸ்கோவில் அந்நாட்டு பிரதிநிதிகள் சந்திப்பதுடன், ரஷ்ய பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் ஆகியோரும் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால்மூல வாக்களிப்பு திகதிகளில் மாற்றம்

எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு சில தினங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்...

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் குறித்து பேசப்பட்ட அண்மைய யூடியூப் காணொளி தொடர்பாக…

'LONDON TAMIL TV' என்ற யூடியூப் பக்கத்தில் வெளியான நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் ஐயூப் அஸ்மின் என்பவர் உயிர்த்த...

கிரீஸ் மரத்திலிருந்து தவறி விழுந்து மாணவன் பலி

எல்பிட்டிய பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரத்திலிருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எல்பிட்டிய, பிட்டிகல...