follow the truth

follow the truth

April, 19, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாயுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அநுரவின் ஆட்சியில் நீதி

யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அநுரவின் ஆட்சியில் நீதி

Published on

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் தெற்கில் வாழும் மக்களுக்கும், வடக்கு – கிழக்கு மலையக வாழ் தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் இன, மத, சாதி, நிற பேதமின்றி அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க முடியும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் போரினால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை ஆட்சியில் இருந்த ஒவ்வொரு அரசாங்கமும் ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை எனவும், தங்கள் அரசாங்கத்தின் கீழ் நீதி நிலைநாட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தின் பின்னர் வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவம் விட்டுச் சென்ற போதிலும் அவர்களுக்கு அந்த காணிகள் உரியதாக இல்லை எனவும், அவர்களுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், அதனை பாதுகாக்கும் நாடு என்பதை உணர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“நாட்டு அரசாங்கம் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும், இந்த நாடு நம் அனைவருக்கும் சொந்தமானது, அவர்களில் மனப்பான்மை மாற்றம் ஏற்படும், ஒவ்வொரு சிங்கள தமிழ் முஸ்லிம் பர்கர் குழந்தையும் இதை உணரும் வகையில் இந்த நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும். இது அவர்களின் தாய்நாடு.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசு இனவாதமாகவே செயல்படுகிறது – கஜேந்திரகுமார்

பட்டலந்த சித்திரவதை முகாம் விடயத்தில் சர்வதேச பங்களிப்பைப் பற்றி சிந்திக்கும் தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச...

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பொறுப்பை மீண்டும் ஏற்கும் இம்தியாஸ்

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பொறுப்பை ஏற்க இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் விரைவில் விருப்பம் தெரிவிப்பார் என்று ஐக்கிய...

எனக்கு ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் கடிதங்கள் வருகின்றன.. பதில் வேண்டுமெனில் NPP இற்கு வாக்களியுங்கள் – பிரதமர்

தமக்கு தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் கிடைக்கின்றன என்றும், அந்தக் கடிதங்களில் பெரும்பாலானவை, குறிப்பாக 900க்கும் மேற்பட்டவை, கிராம மட்டத்திலேயே...