இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை பேட் கம்மின்ஸ் (Pat Cummins) படைத்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான தற்போதைய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
வங்கதேச இன்னிங்ஸின் 18வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளிலும், 20வது ஓவரின் முதல் பந்திலும் இந்த விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.
முகமது மஹ்முதுல்லா, மஹதி ஹசன், தவ்ஹித் ஹர்தோய் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
இதற்கு முன் ஆஸ்திரேலியா சார்பில் ப்ரெட் லீ 20 ஓவர் சர்வதேச போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.