பெண்கள் வலுவூட்டல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் போது கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் தொடர்பான வாக்கெடுப்பு இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்கவினால் இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது.
இதன்படி, திருத்தங்களுக்கு ஆதரவாக 05 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் கிடைத்தன.
அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்கவினால் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் 09 மேலதிக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டதாக பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.