எதிர்க்கட்சித் தலைவரின் கொள்கை ஆலோசகராக பொருளாதார நிபுணர் தலால் ராஃபி நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு புதிய பதவிக்கான நியமனக் கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நேற்று (19) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
தலால் ராஃபி, சர்வதேச நாணய நிதியத்தின் பொது நிதி குறித்த நிபுணர் மன்றத்தில் சட்ட உறுப்பினராகவும், உலகப் பொருளாதார மன்றத்தின் நிபுணர் வலையமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.
பலதரப்பு அபிவிருத்தி வங்கியின் பொருளாதார நிபுணரும் பொருளாதார கொள்கை ஆலோசகருமான தலால் ரஃபி, Deloitte Global Economist வலையமைப்பின் உறுப்பினராகவும், இலங்கை மத்திய வங்கியின் வங்கியியல் ஆய்வு மையத்தில் வெளி விரிவுரையாளராகவும் உள்ளார்.
அவர் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி (USAID) ஆகியவற்றிற்கான திட்டங்களில் பணியாற்றியுள்ளார்.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி, உலக பொருளாதார மன்றம், லண்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அண்ட் எகனாமிக்ஸ் (London school of business) மற்றும் ஃபோர்ப்ஸ் (Forbes) இதழ் ஆகியவற்றால் இது குறித்து வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.