ஹஜ் யாத்திரையின் போது, 550 இஸ்லாமிய யாத்திரீகர்கள் வெப்பமான காலநிலை மற்றும் நெரிசலில் சிக்கி இறந்துள்ளனர் என்று சவூதி அரசாங்கம் கூறுகிறது.
அறிக்கையின்படி, இறந்த 550 பேரில் 323 பேர் எகிப்தியர்கள்.
அவர்களில் பெரும்பாலோர் நீர்ச்சத்து குறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமான காலநிலையில் யாத்திரீகர்கள் யாத்திரை செய்ய சிரமப்பட்டபோது, அவர்களில் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இறந்ததாக சவுதி அதிகாரிகள் விளக்குகின்றனர்.