தற்போது ஜப்பானில் பரவி வரும் ஸ்ட்ரெப்டோகோக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) (STSS) பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஆயிரம் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் நோயாளிகள் இறந்துவிடுவதாக அந்நாட்டு மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 77 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இது மிக விரைவாக பரவி கடுமையான அறிகுறிகளை வெளிப்படுத்துவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உட்பட பல நாடுகள் ஆபத்தில் இருப்பதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.