ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளச்செய்ய முடியும் என்பதை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதித் தேர்தலின் போது மீண்டும் ஒரு பரிசோதனை செய்து கோரிக்கை விடுவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலமே வெல் பாலத்தை கடக்க முடியும் எனவும் புதிய நபர் தேவை இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மினுவாங்கொடை பிரதேசத்தில் இன்று (16) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.