follow the truth

follow the truth

April, 19, 2025
Homeவணிகம்70% சம்பள அதிகரிப்பை அரசு விதித்ததை எதிர்த்து தாங்கள் நீதிமன்றம் செல்லவுள்ளதாக RPCகள் தெரிவிப்பு

70% சம்பள அதிகரிப்பை அரசு விதித்ததை எதிர்த்து தாங்கள் நீதிமன்றம் செல்லவுள்ளதாக RPCகள் தெரிவிப்பு

Published on

தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறை தொழிலாளர்களின் சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் எதுவித அடிப்படியுமின்றி 70% ஆல் உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இந்தத் தீர்மானத்திற்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

வியாபார நிறுவனங்களின் நீடித்த நிலைத்தன்மைக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பேணவும் சம்பள அதிகரிப்பு உற்பத்தித்திறனுடன் நெருக்கமாக இணைக்கப்பட வேண்டும். என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) வலியுறுத்தியுள்ளது.

தேயிலை உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளிலும், இலங்கை ஏற்கனவே மிக உயர்ந்த உற்பத்தி செலவு, மிக கூடிய நாட்சம்பளம் மற்றும் மிகக் குறைந்த உற்பத்தித்திறனுடன் போராடிக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக, சம்பள நிர்ணய சபையால் (Wages Board) புதிதாக அறிவிக்கப்பட்ட தேயிலை துறையிலுள்ள தொழிலாளர்களின் சம்பளம், இந்தியாவின் தேயிலைத் துறையிலுள்ள தொழிலாளர்களின் சம்பளத்தைவிட இருமடங்கு அதிகமாக இருப்பதால் உலக சந்தையில் இலங்கை தேயிலையின் உற்பத்தி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த தன்னிச்சையான சம்பள அதிகரிப்பு பிராந்திய தோட்ட நிறுவனங்களை மட்டுமல்லாது, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள 400 க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகள், வெளிப்புற தொழிலாளர்களைப் பயன்படுத்தும் சிறுதோட்டங்களின் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து இறப்பர் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளையும் பாதிக்கும்.

மேட்படி சம்பள அதிகரிப்பு ஒரு கிலோ தேயிலையின் உற்பத்தி செலவை 1,450 ரூபாவாக அதிகரிப்பதோடு, ஏல விற்பனை சராசரியான 1,250 ரூபாவை விட அதிகமாக இருக்கும் என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பாரிய இழப்பு தொழில்துறையின் நிலைத்தன்மைக்கு கடுமையான நிதிச் சிக்கல்களை ஏற்படுத்தும். தேயிலைத் தொழில்துறை ஏற்கனவே கடுமையான கடன் சுமையில் உள்ளது, தேசிய சம்பள நிர்ணய சபை (Wages Board) கட்டாயப்படுத்திய சம்பள உயர்வினால் ஏற்படும் வியாபார நஷ்டம் நிதித்துறையையும் பாதிக்கும்.

ஏனெனில், பல தோட்ட நிறுவனங்கள் நிதிநிறுவனங்களிடமிருந்து கணிசமான கடனைப் பெற்றுள்ளன. இவர்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், நிதி நிறுவனங்களும் பாதிக்கப்படும்.

நிதிச் சுமையால் ஏற்படும் தாக்கத்தை வலியுறுத்தும், இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA), 70% சம்பள அதிகரிப்பினால் ஏற்படும் உற்பத்தி செலவு அனைத்து பிராந்திய தோட்ட நிறுவனங்களின் தேயிலை மற்றும் இறப்பர் இலாபத்தை பல மடங்கு விஞ்சியது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது, தொழிலாளர்கள் நிலையான சம்பளம் மற்றும் உற்பத்தித்திறன் அடிப்படையிலான சூத்திரங்கள் இரண்டிலிருந்தும் வருமானத்தைப் பெறுகின்றனர், இதனுடன் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, (EPF, ETF) Gratuity மற்றும் பிற வழங்கப்படும் சேவைகளும் அடங்கும்.

தொழில்துறை மற்றும் அதன் ஊழியர்களின் நீண்டகால நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை நிலையான முறையில் பாதுகாப்பதற்கும் அதனை மேம்படுத்துவதற்குமான (PA) உறுதிப்பாட்டை இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமம் (PA) மீண்டும் வலியுறுத்துகிறது.

70% சம்பள அதிகரிப்பை அரசு விதித்ததை எதிர்த்து தாங்கள்
நீதிமன்றம் செல்லவுள்ளதாக RPCகள் தெரிவிப்பு

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி...

மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சிறிய அளவில் உயர்வைப் பதிவு செய்துள்ளது. WTI வகை மசகு...

சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்வு

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பல வரிகளை நீக்கியதையடுத்து சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. இதன்படி ஜப்பானின்...