தபால் சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கடிதங்களை எதிர்வரும் 2 நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்ைக எடுப்பதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
ஊழியர்களை சேவையில் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கான தீர்வை வழங்க அரசாங்கத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திதி வரை கால அவகாசம் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
24 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஒன்றிணைந்த தபால் ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார கூறியுள்ளார்.