follow the truth

follow the truth

April, 8, 2025
HomeTOP3பாராளுமன்றம் ஜூன் 18 முதல் கூடவுள்ளது

பாராளுமன்றம் ஜூன் 18 முதல் கூடவுள்ளது

Published on

பாராளுமன்றம் ஜூன் மாதம் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜூன் 18 செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணிக்கு பாராளுமன்ற கூடவுள்ளதுடன், மு.ப. 9.30 முதல் மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 19 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9.30 முதல் மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 வரை சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் 2366/33 மற்றும் 2369/42 ஆம் இலக்க விசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், தெங்கு அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் தீர்மானம் மற்றும் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் 2381/24 ஆம் இலக்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

ஜூன் 20 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.30 முதல் மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 வரை கடந்த ஜூன் 4 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மற்றும் யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழு சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதனையடுத்து பி.ப. 5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவனின் மறைவு குறித்து ஜனாதிபதியிடமிருந்து ஒரு நெகிழ்ச்சியான பதிவு

அண்மையில் காலமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவனுக்கு ஜனாதிபதி அநுர குமார...

கொழும்பு பங்குச் சந்தை 43,500 கோடி ரூபாவை இழந்தது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள்,...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற்...