இன்னும் மூன்று மாதங்களில் கிரிக்கெட்டினை அழித்த அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்திருந்தார்.
ஊடக சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே;
“.. ஜனாதிபதி, அமைச்சர்களான அலி அப்ரி, காஞ்சன விஜேசேகர, மனுஷ நாணயக்கார உள்ளிட்ட அமைச்சர்கள் கூட்டமொன்று கிரிக்கெட் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
அந்த குழுவின் அறிக்கைக்கு என்னதான் நடந்தது என தெரியாது. இந்த இலஞ்சர்களை பாதுகாக்கும் ஆலோசகர்கள் குழுவொன்றும் உள்ளது. அந்த ஆலோசகர்களின் தேவைகள் நிமித்தம் இவ்வாறான அனைத்து குழுக்களின் அரக்கிகளும் ஓரங்கட்டப்பட்டுள்ளது குறித்தும் எமக்கு சந்தேகம் நிலவுகின்றது.
ஹரின் பெர்னாண்டோ நேற்று ஊடக சந்திப்பின் போது, ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டது போல இலங்கை கிரிக்கெட் அணியானது பங்களாதேஷ் தோல்வியுற்று நெதர்லாந்துக்கு அடித்து வேறு வழியில் பைfனல் செல்ல கனவு கண்டார். சரியாக வேலை செய்திருந்தால் ஹரின் பெர்னாண்டோ அமைச்சரே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானது போல் இலங்கை அணியானது சுப்பர் 8 இற்கு செல்லும் என்று நீங்கள் கனவு கண்டிருக்க தேவையில்லை.
நிர்வாகத்தின் ஒழுக்கம் முறையாக இல்லாத போது, வீரர்களின் ஒழுக்கம் குறித்து நிர்வாகத்திற்கு கதைக்க முடியாது. இந்த விளையாட்டு எல்லாம் இன்னும் மூன்று மாதங்களுக்கு தான்.. இந்த மூன்று மாதங்களும் முடிந்ததும் கிரிக்கெட்டினை அழித்த ஒவ்வொருவருக்கும் சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளபப்டும். . இந்த இலஞ்ச ஊழல் வாதிகளிடம் இருந்து கிரிக்கெட்டினை கைப்பற்றுவோம் என நாம் வாக்குறுதி அளிக்கிறோம்..”