follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP2"அநுர ஜனாதிபதியானாலும் நாட்டின் பொருளாதாரத்தினை மாற்றியமைக்க முடியாது"

“அநுர ஜனாதிபதியானாலும் நாட்டின் பொருளாதாரத்தினை மாற்றியமைக்க முடியாது”

Published on

தமது கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானாலும் நாட்டின் தற்போதைய நிலைமையை மாற்றியமைக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பொது பேரணியில் பேசிய அவர், இதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும், வீட்டு பொருளாதாரத்தை கவனமாக நிர்வகிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; “சில நேரம் நினைத்துப் பார்க்கிறேன். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முடியவில்லை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் முடியவில்லை. தேசிய மக்கள் சக்தி எப்படித்தான் இதனை தாங்குவது? எல்லோராலும் முடியாது என்றால், அதைச் செய்ய முடியாது தான்..

தோழர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாவார்.., விஸ்வகர்மாவின் பலத்தினாலும் மந்திர சக்தியினாலும் இதை மாற்றுவதற்கு வழியில்லை.

கடின அர்ப்பணிப்பு செய்தால், பால் தேநீருக்குப் பதிலாக தேநீர் குடித்தால், தேவையற்ற செலவுகளைக் குறைத்து, நம் வீட்டுப் பொருளாதாரத்தை சிறிது நேரம் கவனமாக நிர்வகித்தால், அதைச் செய்வோம்.”

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக...

மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துவோம்

வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும்...