follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு - திருத்தங்கள் செய்யவும் வாய்ப்பு

கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு – திருத்தங்கள் செய்யவும் வாய்ப்பு

Published on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்தார்.

அவசியம் ஏற்படுமாயின் இந்தப் புதிய யாப்பில் திருத்தங்களைச் செய்வதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த இதனைத் தெரிவித்தார்.

“தற்போது, அரசாங்கம் “உறுமய” மற்றும் “அஸ்வெசும” உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அத்துடன் கடந்த காலத்தில் நிறுத்தப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மூலம் கிராமம் மற்றும் நகரங்களில் மீண்டும் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.

அதற்கு ஆதரவளிப்பது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும். எனவே மக்களுக்கான கடமைகளை நிறைவேற்ற முடியுமான இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் நமது கடமையை செய்ய வேண்டும்.

தற்போது 1942 கிராம சேவைப் பிரிவுகளுக்கு கிராம உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், நீண்ட காலமாக கிராம உத்தியோகத்தர்களின் சேவை யாப்பு பிரச்சினை காணப்பட்டது. அதற்காக முன்வைக்கப்பட்ட புதிய சேவை யாப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், அதில் திருத்தங்கள் செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் கிராமிய உணவுப் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் போசாக்குக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்க முடிந்துள்ளது.” என்று இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை

தேங்காய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் "நடமாடும் தேங்காய் விற்பனைத் திட்டத்தை" ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றாடல்,...

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று (22)...

வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து 30 மில்லியன் ரூபா உதவி

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD...