போலி கணக்குகளைப் பயன்படுத்தி போலியான செய்திகளைப் பரப்புவது சமூக ஊடக வலையமைப்புகள் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனையாகும்.
இதற்கு தீர்வு காண குறித்த நிறுவனங்கள் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றன.
இதற்கமைய, பேஸ்புகின் மெடா பிளட்போம் சீனாவில் இருந்து செயல்படுவதாக அடையாளம் காணப்பட்டு சுமார் 524 போலி கணக்குகளை முடக்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.
இந்தக் கணக்குகள் சுவிஸ் உயிரியலாளர் வில்சன் எட்வர்ட்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு , கொவிட்டின் ஆரம்பம் குறித்த பரிசோதனைகள் தொடர்பான போலியான செய்திகள் பரப்பப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.