பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள 11 பாடசாலைகளை எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி மாகாணங்களில் இருந்து வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.