சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வருடாந்த சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் எப்.ஹூங்போவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து பாராட்டினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தும் நடவடிக்கையின் போது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமூக அபிவிருத்திக் கொள்கையைப் பின்பற்றியமைக்காக அமைச்சர் மனுஷ நாணயக்காரவை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பாராட்டினார்.
தொழில் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் தொடர்பான மாநாடு (C155), வீட்டுப் பணியாளர்கள் மாநாடு (C189), மற்றும் பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தல் (C190) ஆகியவற்றை அங்கீகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அமைச்சர் விளக்கினார்.
தொழில் இழைப்பு ஏற்பட்டால் சலுகைகள், மகப்பேறு பலன்கள் மற்றும் பணியிட விபத்துகளுக்கான காப்பீடு போன்றவற்றை உள்ளடக்கி ஆரம்பிக்கப்படவுள்ள சமூக பாதுகாப்பு அமைப்பு பற்றி அமைச்சர் விளக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தேசிய தொழிலாளர் சந்தை தகவல் முறைமை மற்றும் தொழிலாளர் சந்தையின் மீட்பு மற்றும் உத்திகளை கண்காணித்து செயல்படுத்துவதற்கு அமைச்சுக்களுக்கு இடையேயான உயர்மட்ட குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தொழிலாளர் சந்தையை இலக்காகக் கொண்ட திட்டத்திற்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு முழு ஆதரவை வழங்கும் என்று பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் எஃப். ஹூங்போ உறுதியளித்தார்.