follow the truth

follow the truth

September, 28, 2024
HomeTOP1வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகளை விற்கும் மோசடி

வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகளை விற்கும் மோசடி

Published on

இந்த நாட்களில் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

வெள்ள நிலைமை காரணமாக, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிக்குஞ்சுகளே இன்றைய நாட்களில் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அதன் சோதனைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய இரசிங்க தெரிவித்தார்.

இவ்வாறான கோழி இறைச்சியை உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிப்பதால், அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சஞ்சய இரசிங்க கூறுகிறார்.

“.. வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகளை சுத்தப்படுத்தி, பொதி செய்து விற்பனை செய்யும் கும்பல் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. கடந்த சில நாட்களாக இது குறித்து விழிப்புடன் இருந்தோம். சுற்றிவளைப்புகளை நடத்தினோம். இது நாடளாவிய ரீதியில் நடக்கிறது. நீங்களும் கோழி இறைச்சிகளை கொள்வனவு செய்யும்போது கவனமாக இருக்கக் கோருகிறோம். குறிப்பாக இறைச்சிக்காக எடுக்கப்படும் கோழி இறைச்சி வெள்ளை நிறமாக இருக்கும். ஆனால் இவை சிவப்பு நிறத்தினை ஒத்தவையாக இருக்கும். இவை எவ்வளவு சூடாக்கினாலும் இவற்றில் உள்ள கிருமிகள் அழியாது “

“களனி ஆற்றைச் சுற்றித்தான் பல கடைகள் உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்கள் இருந்தால், மிகக் குறைந்த விலையில் ஆன்லைனில் பொருட்களைக் கொண்டுவருவதாக யூடியூப், பேஸ்புக்கில் விளம்பரங்கள் வருகின்றன. இதற்கு மயங்காதீர்கள். இவை நுகர்வுக்கு தகுதியல்ல. தயவு செய்து அவ்வாறு ஏதும் அறிந்திருந்தால் 1977 எனும் தொலைபேசிக்கு அறியத்தரவும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகம்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி நாட்டிற்குள் முன்னெடுக்கும்...

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – 7 பேர் கொண்ட குழு நியமிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 7 நிபுணர்களைக் கொண்ட சுயாதீன...

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்தும், லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை...