follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP1இந்திய – இலங்கை உறவுகளை வலுவாக தொடர்வது மீண்டும் உறுதி

இந்திய – இலங்கை உறவுகளை வலுவாக தொடர்வது மீண்டும் உறுதி

Published on

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய-இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத் தலைவர்கள் மீண்டும் உறுதியளித்தனர்.

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்று (09) புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது.

அரச தலைவர்கள் பலர் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதுடன் பிராந்திய அரச தலைவர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதேவேளை, பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்திருந்த இராப்போசன விருந்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஏனைய அரச தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரசன்னம் குறித்து இந்திய ஊடகங்கள் முக்கிய இடத்தை வழங்கியிருந்ததோடு , புதுடெல்லியின் பிரதான சுற்றுவட்டங்களைச் சுற்றி இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடியின் உருவம் பொறிக்கப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்த வருட முதல் காலாண்டில் வாகனங்கள் இறக்குமதி

கடந்த முதலாம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவைக்காக பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கார்கள் உள்ளிட்ட இலகுரக...

சுதந்திர கட்சி கூட்டணியாக சிலிண்டர் சின்னத்தில் களமிறங்க தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நிமல் சிறிபால டி சில்வா அணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர்...

பியூமியிடம் மீண்டும் விசாரணை

பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான BMW கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய பியூமியிடம்...