இந்தியாவில் நடைபெற்ற பாராளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மாலத்தீவு அதிபர், வங்காளதேச பிரதமர், இலங்கை ஜானதிபதி உள்ளிட்டோர் பதவி ஏற்ப விழாவில் கலந்த கொள்ளவுள்ளனர்.
ஆனால், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவுடன் எதிரும் புதிருமாக இருந்தாலும் கூட பரஸ்பர வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
“இந்திய மக்களுக்கு அவர்களுடைய தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான உரிமை உள்ளது. அவர்களுடைய தேர்தல் செயல்முறையில் எங்களிடம் எந்த கருத்துகளும் கிடையாது. இன்னும் அதிகாரப்பூர்வமாக ஆட்சி அமைக்கப்படாத நிலையில், இந்திய பிரதமருக்கு வாழ்த்து கூறுவது பற்றி பேசுவது முன்னதாக எடுக்கப்பட்ட செயலாகும்.” என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்,